Sunday, June 7, 2015

  சில மாதங்களுக்கு முன்பாக ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருக்கிறார் சூர்யா. அந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர் ராஜமௌலியும் வந்திருந்தாராம்.

அப்போது பாகுபலி படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரம், அதனால் அந்நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி படத்தைப் பற்றி நிறையக்கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன், அந்தப்படம் இந்தியாவின் மிகப்பெரிய படமாகத் தயாராகிக்கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள், அப்படிப்பட்ட அந்தப்படத்தில் எனக்கு ஒரு சின்னவேடமாவது கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அப்போது அதற்கு இயக்குநர் ராஜமௌலி பதிலெதுவும் சொல்லவில்லையாம்.
அதன்பின்னர் டிவிட்டர் உள்ளிட்ட சமுகவலைதளங்களில் ராஜமௌலிக்கு நிறையக் கேள்விகள் வந்தனவாம். என்ன எங்க தலைவரே நடிக்கணும்னு சொல்லியிருக்கார் அவரை நடிக்கவைக்கிறீங்களா? இல்லையா? என்று நிறையப்பேர் கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்களாம். அன்பாகக் கேட்கிறார்களா? இல்லை மிரட்டுகிறார்களா? என்றே தெரியவில்லை ஆனால் நிறையப்பேர் கேட்டுவிட்டார்கள் என்று சென்னையில் நடந்த பாகுபலி படத்தின் டிரெயிலர் வெளியீட்டுவிழாவில் சூர்யாவை வைத்துக்கொண்டே சொன்ன, இயக்குநர் ராஜமௌலி கூடவே, இப்படி ஒரு நெருக்கடியை எனக்கு ஏற்படுத்திவிட்டீர்களே சூர்யா என்றும் கேட்டார்.


அதற்குப் பதிலளித்த சூர்யா, உங்களோடு ஒருநாளாவது பணியாற்றவேண்டும் என்று ஆசைப்பட்டேன், இந்தஒருநாள் உங்களோடு இருந்ததே போதும், உங்கள் படத்தில் நடிக்கவேண்டாம் என்று சொன்னார்.  

0 comments:

Post a Comment