Monday, June 8, 2015

உதயநிதி இப்போது திருக்குமரன் இயக்கத்தில் கெத்து படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு என்றென்றும்புன்னகை அகமது இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவிருக்கிறார்.
அந்தப்படத்துக்காக முதலில் ஒரு கதையைத் தயார் செய்துவைத்திருந்தார்கள். பெரும்பகுதி வெளிநாட்டில் நடக்கும் அந்தக்கதையை ஒருகட்டத்தில் வேண்டாமென்று சொல்லிவிட்டாராம் உதயநிதி. அதன்பின்னர் இப்போதைய போக்கின்படி ஒரு பேய்க்கதையை உருவாக்கலாம் என்று முடிவுசெய்து அதற்காக வேலை செய்துகொண்டிருந்தாராம் அகமது. அந்தவேலை நடந்துகொண்டிருந்த நேரத்தில் மறுபடி நடந்த பேச்சின்போது பேய்க்கதை வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டார்களாம். 

அடுத்து எந்தமாதிரிக்கதை? என்று இயக்குநர் தடுமாறியநேரத்தில் ஒரு இந்திப்படத்தை மொழிமாற்றம் செய்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்களாம். இதற்காக 2013 இல் வெளியான ஜாலி எல்எல்பி என்கிற படத்தை அப்படியே மொழிமாற்றம் செய்யவிருக்கிறார்களாம். 

அர்சத்வர்சி, பொம்மன்இரானி ஆகியோர் நடித்த அந்தப்படத்தை சுபாஷ்கபூர் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படம் என்றும் நீதித்துறையில் நடக்கும் நிகர்வுகளை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் படம் என்றும் சொல்லப்படுகிறது.
 

0 comments:

Post a Comment