Monday, June 8, 2015


தெலுங்கு ஏரியாக்களில் அனுஷ்கா என்றால் எரிகிற சூடத்தையும் அப்படியே வாயில் போட்டு முழுங்குவார்கள் போலிருக்கிறது. அந்தளவுக்கு அவருக்காக ஆ வென்று வாய் பிளக்கிறது தெலுங்கு ரசிகர்கள் கூட்டம். அவர் பண்ணும் படங்கள் அப்படி. அருந்ததி படத்தை தொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் ருத்ரம்மாதேவி அதிரடியான படம். அதுவே இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் பாகுபலி. அதில் அவரது லுக்கும், கிக்கும் ரசிகர்களை ஏகத்திற்கும் நரம்பு துடிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான் ஒரு படத்தை அவர் எவ்வளவு சாதாரணமாக கமிட் பண்ணுகிறார் என்று விளக்கினார் அவரே.
பாகுபலி படத்தை பற்றிய பெருமைகளை ஒரு பக்கத்தில் சொல்லிவிட முடியாது. இந்தியாவின் மிகப்பெரிய சினிமா என்று மட்டும் இப்போதைக்கு சுருக்கமாக சொல்லிவிடலாம். இந்த கதையை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அனுஷ்காவிடம் கூறியவுடனே அவர் ஓ.கே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அதற்கு காரணம் அந்த கதைக்காக அல்ல. பின்ன என்னவாம்? அதை அவர் வாயாலேயே கேட்பதுதான் சரி.
இந்த படத்தில் என்னை நடிக்க கூப்பிட்டாங்க. படத்தின் ஹீரோ பிரபாஸ்னு தெரிஞ்சதும் நான் ஓ.கே சொல்லிட்டேன். ஏன்னா அவங்க அம்மா விதவிதமா சமைச்சுட்டு வருவாங்க. அதை சாப்பிட அவ்வளவு நல்லாயிருக்கும். அப்புறம் ராஜமவுலி சாரோட மனைவியும் நல்லா சமைப்பாங்க. அவங்களும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு விதவிதமா எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க. நல்லா சாப்பிடலாம்னுதான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். சென்னையில் நடந்த பாகுபலி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்தான் இப்படி ஒப்புதல் ‘நாக்கு’மூலம் கொடுத்தார் அனுஷ்கா.
பின்னாலேயே மைக்கை பிடித்த எஸ்.எஸ்.ராஜமவுலி, அட… என் கதைக்காகதான் நீ ஒப்புக் கொண்டேன்னு நினைச்சேன். இப்படி கவுத்திட்டியே என்று கமெண்ட் அடிக்க… அரங்கமே ‘கொல்…’லென்றானது.

0 comments:

Post a Comment