Monday, June 8, 2015

பிரபல நடிகர் நாசருக்கு கொலை மிரட்டல் - Cineulagam
தமிழ் சினிமாவின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என இரட்டை சவாரி செய்பவர் நாசர். இவர் விஷால் கூட்டணியுடன் இணைந்து வருகின்ற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை எதிர்க்கவிருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.
இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இன்னும் அதிகாராப்பூர்வமாக வரவில்லை, ஆனால், அதற்குள் இவருக்கு அடிக்கடி தொலைப்பேசியில் கொலை மிரட்டல் வருகின்றதாம்.
அது மட்டுமில்லாமல் பெயர் கூறாமல், மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்களாம். ஆனால், நாசர் இதையெல்லாம் நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை என கூறியுள்ளாராம்.

0 comments:

Post a Comment