இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா, கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க , நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் படத்தை வெளியிடுகிறார் .
வழக்கம்போல ஒரு காதல் அதனை சுற்றி நடக்கும் ஒரு ஜாதி கலவரம் என கதை பின்னணி இருந்தாலும் இயக்குநர் சற்குணம் என்ற ஒரு தேசிய விருது நாயகனின் பெயரால் படம் எந்தளவுக்கு வித்தியாசப்பட்டிருக்கும் என்பதை படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும்போதே தெரிகிறது.
மேலும் நாயகி ஆனந்தியை நாங்க நடிக்க கூப்பிட்ட பிறகு இந்த படத்திலும் எனக்கு டூயட் பாடலில் டான்ஸ் இல்லையே என கவலையில் இருந்தாங்க, இதனால நாங்க எல்லோரும் முடுவுசெஞ்சு ஆனந்தியிடம் என்று நியூசிலாந்துல ஒரு டூயட் எடுக்கப்போறோம்னு அதுல நீ தான் கலக்கலா டான்ஸ் ஆடப்போற என்று சொன்னதும் அவரின் முகத்தில் பல வோல்ட் வாட்ஸ் பல்பு எரிஞ்சுது அப்புறம் படத்துல அதே புத்துணர்ச்சியோட நடிச்சி கொடுத்தாங்க என்றார் இயக்குநர் சற்குணம்.
இதனை தொடந்து நாயகி ஆனந்தி பேசும்போது இதற்கு பதில் அளித்தார் “ஆமா சார். என்னை ஏமாத்திட்டாங்க” என்ற ஆனந்தி, ஆனாலும் பாலா சார் தயாரிக்கிற படத்தில் சற்குணம் சாரின் இயக்கத்தில் நடிப்பது சந்தோசம் “என்றார்.
சண்டிவீரன் மக்களை மகிழ்விக்க இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் திரைக்கு வரும் என அறிவித்துள்ளார்கள்.

0 comments:
Post a Comment