நடிகரும், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதிக்கும்-கீர்த்தனாவுக்கும் இன்று காலை திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்
முன்னின்று நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்த பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும் காலை முதலே அண்ணா அறிவாலயத்திற்கு பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூடினர்.
இந்த திருமணத்தில் நடிகர் விஜய்யும் கலந்துகொண்டார். அவர் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் இந்த விழாவில் கலந்துகொண்டார். பொது விழாக்களில் பெரும்பாலும் மாடர்ன் உடைகளில்தான் விஜய் கலந்துகொள்வார். அப்படியிருக்கும்போது, அருள்நிதி திருமணத்திற்கு பட்டு வேஷ்டி, பட்டு சட்டை என பாரம்பரிய உடையில் அவர் வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
திருமணத்திற்கு வருகை தந்த விஜய்யை, திமுக பொருளாளரும், இளைஞரணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், நேராக மணமேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்திய விஜய், அவர்களுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் வந்த விஜய்யை பார்க்க ரசிகர்கள் திரளாக கூடியிருந்தனர்
0 comments:
Post a Comment