நான் எப்படி சொல்வேன்... என்னாலே சந்தோசத்தை தாங்க முடியலையே... என்று சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார் தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறியுள்ள அந்த ரம்யம். விசயம் இதுதான்.
சீயான் நடிகர் தொடங்கியுள்ள புதிய ஷாப்பிங் டிவி சேனலை தொடங்கியுள்ளனர். இதன் தொடக்கவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரமும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் மாறி மாறி புகழ்ந்து கொண்டதோடு அவர் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் மேடையிலேயே அறிவித்தனர். அடடா ரூட் மாறுதே என்று நினைக்கவேண்டாம். விசயமே இனிமேல்தான்.
இந்த தொடக்கவிழாவை தொகுத்து வழங்கியவர் ரம்யம்தான். அப்போதுதான் லக்கி பிரைஸ் அடித்ததாம். கண்மணியில் நடிகையின் நடிப்பை பார்த்த சீயான் தனது படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தாராம். இதனால்தான் குதூகலம் அடைந்துள்ளார் ரம்யம். தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் இதனை பகிர்ந்து கொண்ட நாயகி, நன்றி கூறியுள்ளார். அதோடு பாலிவுட் நட்சத்திரத்தையும் பாராட்டியுள்ளார்.
Tuesday, June 9, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment