
அஜித்-வெங்கட் பிரபு கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் மங்காத்தா. இப்படத்திற்கு பிறகு இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என அனைவரும் ஆவலுடன் இருக்க, வெங்கட் பிரபுவின் கருத்து ஒன்று அஜித் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
டுவிட்டரில் ஒரு ரசிகர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் ப்ரேம்ஜி தான் கதாநாயகன் என்பது போல் டுவிட் செய்திருந்தார். இதற்கு வெங்கட் பிரபு ‘மங்காத்தா படத்தில் யார் கதாநாயகன்?’ என பதில் கூற, பிறகு சொல்லவா வேண்டும்.
அஜித் ரசிகர்கள் மிகவும் கோபமாக பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவர் எதை நினைத்து அப்படி கூறினார் என்று அவருக்கு தான் தெரியும்.
0 comments:
Post a Comment