Monday, June 8, 2015


நல்ல வாயன் சம்பாதித்ததை நாற வாயன் தின்ன கதை என்று சொல்வார்கள்.. அந்தக் கதையாகியுள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) நிலை. அந்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த செப் பிளாட்டர் பதவியிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் ஃபிஃபா நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட யுனைட்டெட் பேஷன்ஸ் ஹாலிவுட் படம் பெரும் அடி வாங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் மொத்தமே பத்து தியேட்டர்களில்தான் அமெரிக்காவில் திரையிடப்பட்டு. அதன் வசூலோ வெறும் 607 டாலர்தானாம்... அதாவது இந்திய மதிப்பில் ரூ. 38,896தான். அதாவது அரை லட்சத்தைக் கூட தொடவில்லை இந்தப் படம், வெள்ளி, சனி வசூலில். பிரடெரிக் ஆபர்டின் எழுதி, இயக்கிய படம் இது.

என்ன கொடுமை என்றால், பீனிஸ் டவுன்டவுனில் உள்ள பிலிம்பார் தியேட்டரில் இந்தப் படம் வெறும் 9 டாலர்தான் வசூலித்துள்ளதாம். அதாவது ஒரே ஒருவர்தான் வந்து படம் பார்த்து விட்டுப் போயுள்ளார். பரவாயில்லையே..ஒரே ஒருவர் வந்தாலும் படத்தை ஓட்டியிருக்கிறார்களே...!

இது ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் மிக மோசமான படம் என்ற பெயரை யுனைட்டெட் பேஷன் படத்துக்குத் தேடிக் கொடுத்துள்ளது.

படம் திரைக்கு வந்த நேரம்தான் சரியில்லை என்கிறார்கள். ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் ஊழல் புகாரில் சிக்கி கடும் எதிர்ப்புக்குள்ளாகி ராஜினாமா செய்த சில நாட்களில் இந்தப் படம் திரைக்கு வந்தது. இதுவே அதற்குப் பெரும் பின்னடைவாகப் போய் விட்டது.

நியூயார்க், லாஸ் ஏஞ்சலெஸ், வாஷிங்டன், பீனிக்ஸ், கான்சாஸ், மியாமி, மின்னபோலிஸ், ஹூஸ்டன், டல்லாஸ், பிலடெல்பியா ஆகிய நகரங்களில் இந்தப் படம் திரையிடப்பட்டது. ஆனால் வசூல் மகா கேவலமாக உள்ளது.

நார்த் ஹாலிவுட்டில் 164 டாலர், வாஷிங்டனில் 161 டாலர், நியூயார்க்கில் 112 டாலர் என்று வசூல் போய்க் கொண்டுள்ளது.

இந்தப் படத்தில் டிம் ராத், பிளாட்டர் கேரக்டரில் நடித்துள்ளார். சாம் நீல், பிளாட்டருக்கு முன்பு தலைவராக இருந்த ஜோவோ ஹவலெங்கே வேடத்தில் நடித்துள்ளார். ஃபிஃபாவை நிறுவியவரான ஜூல்ஸ் ரிமெட் வேடத்தில் ஜெரார்ட் டெபர்டியூ நடித்துள்ளார். இவரது வேடத்திற்குத்தான் சற்று வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

0 comments:

Post a Comment