Monday, June 8, 2015


பிரபல மலையாளப்பட இயக்குநரில் தொடங்கி பிரபுதேவா வரை நடிகை நயன்தாராவின் ஆட்டோகிராப் உலகறிந்தது. நயன்தாரா தற்போது போடா போடி என்ற படு தோல்விப்படத்தை இயக்கிய விக்கி என்கிற விக்னேஷ் சிவன் என்கிற இளம் இயக்குநரின் காதல்வலையில் விழுந்துவிட்டார்.

தற்போது நயன்தாரா இவரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கு விக்னேஷ்சிவனின் கதை மட்டும் காரணமில்லை. நயன்தாராவைப் போலவே விக்னேஷ்சிவனும் மலையாளி என்பதும் தானாம்.

நயன்தாரா நடிக்க சம்மதித்துவிட்டார் என்ற ஒரேயொரு அஸ்திரத்தை வைத்துக்கொண்டு விஜய்சேதுபதியிடம் கால்ஷீட் வாங்கினார் விக்னேஷ்சிவன். கதாநாயகி ரெடி, கதாநாயகனும் ரெடி. ஆனால் தயாரிப்பாளர்தான் இல்லை. இந்நிலையில் மீடியாவில் உள்ள ஒரு மலையாள தம்பதியின் மூலம் தனுஷின் மண்டையைக் கழுவி விக்னேஷ்சிவனின் படத்தைத் தயாரிக்கவைத்தனர். அதுதான்.. நானும் ரௌடிதான் படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே விக்னேஷ்சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் தீ பற்றிக் கொண்டதாம். விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக நானும் ரௌடிதான் படக்குழுவினர் சொல்கின்றனர். இந்நிலையில், இன்றோடு நானும் ரௌடிதான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விஜய்சேதுபதி, நயன்தாரா உட்பட பலரும் கலந்து கொண்ட கடைசிநாள் படப்பிடிப்பில் படக்குழுவினர் செல்பி எடுத்துக் கொண்டனர். விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ்சிவன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் உடன் அப்படத்தில் நடித்த ரேடியோ ஜாக்கி பாலாஜியும் ஒரு செல்பி எடுத்துக் கொண்டனராம்.

அந்த செல்பியில் படத்தின் நாயகனான விஜய்சேதுபதி சற்று தள்ளி நிற்க, விக்னேஷ்சிவனுடன் நெருக்கமாக ஏறக்குறைய அவரை கட்டி அணைத்ததுபோல் உரசிக்கொண்டு நயன்தாரா போஸ் கொடுத்திருக்கிறார்.

0 comments:

Post a Comment