ரஜினியின் ஜோடியாகிறார் தேசிய விருது பெற்ற நடிகை?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள திரைப்படத்தில் முதலில் ரஜினி ஒரு வயதான தாதாவாக நடிப்பதாகவும், அவருக்கு இந்த படத்தில் ஜோடியே இல்லை என்றும் முதலில் தகவல் வந்தது. பின்னர் படக்குழுவினர் இந்த படத்தில் கண்டிப்பாக ஹீரோயின் உண்டு என்றும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமான வேடம் இருப்பதால் முன்னணி நடிகையை தேடி வருவதாகவும் கூறினர்.
அதன்பின்னர் ஏற்கனவே ரஜினியுடன் சந்திரமுகி, குசேலன், சிவாஜி போன்ற படங்களில் நடித்த நயன்தாரா, ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்தது. இந்த தகவலும் பின்னர் மறுக்கப்பட்டதால், இந்த படத்தின் நாயகி யார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் இருந்தது.
ஆனால் தற்போது ரஜினியின் நாயகி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ரஜினியுடன் நடிக்க தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வித்யாபாலன் தரப்பில் இருந்தும் இந்த தகவலை ஒப்புக்கொண்டுள்ளனர். ரஜினி படத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடந்தது உண்மை என்றும் ஆனால் இன்னும் இந்த படத்தில் நடிப்பது குறித்து வித்யாபாலன் தன்னுடைய முடிவை சொல்லவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன. நடிகை வித்யாபாலன் தன்னுடைய முடிவை இன்னும் இரண்டொரு நாட்களில் அறிவிக்க இருப்பதால் ரஜினியின் நாயகி யார் என்பது மிகவிரைவில் தெரியவரும்.

0 comments:
Post a Comment