விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அவரவர் அபிமான நடிகர்களின் படங்கள் வெளிவந்தால்தான் மோதிக் கொள்வார்கள். இந்த மோதல் சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே இருக்கும், குறிப்பாக டிவிட்டரில் அவர்கள் மோதிக் கொள்ள ஆரம்பித்தால் அதை டிரெண்டிங்கில் கொண்டு வந்து பரபரப்பாக்கி விடுவார்கள். இப்படித்தான் நேற்று விஜய், அஜித் ரசிகர்கள் இருவருமே எதிரெதிரான இரண்டு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி மாறி மாறி அதை டிரெண்டிங்கில் வர வைத்துவிட்டார்கள்.
மாசு என்கிற மாசிலாமணி படம்தான் இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. சூர்யா படம் வெளிவந்தாலே விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சூர்யாவையும், அவரது படத்தையும் கிண்டலடிப்பது வழக்கமாகிவிட்டது. இப்படித்தான் அஞ்சான் படத்தை மீமீக்கள் மூலம் ஓவராக கிண்டலடித்து படத்தை தியேட்டரை விட்டே ஓட வைத்தார்கள். இப்போது அவர்களுக்கு மாசு படமும் வசதியாக அமைந்துவிட்டது. படம் வெளிவந்ததிலிருந்தே விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அவர்களது அபிமான நடிகர்களை கிண்டல் செய்யும் விதத்தில் சில வசனங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார்கள். அதுதான் இந்த மோதலுக்கு ஆரம்பமாக அமைந்தது. நேற்று அஜித் ரசிகர்கள் என்ற ஹேஷ்டேக்கையும், விஜய் ரசிகர்கள் என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி அவற்றை சென்னை அளவில் டிரெண்டிங்கில் வரவைத்து விட்டனர். நேற்று இந்த மோதல் எல்லை மீறி நடந்திருக்கிறது.
0 comments:
Post a Comment