Sunday, June 7, 2015


விஸ்வரூபம் படத்தை ஆன்லைனிலும் வெளியிடப்போவதாக கமல் அறிவித்தார். அதற்கு திரை அரங்கு உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் அப்படத்தை இணையதளத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதற்கிடையில் இயக்குனர் சேரன் புதிய பட விசிடியை வீட்டுக்கு வீடு விற்கும் முறையை அறிமுகப்படுத்தினார். முதல் படமாக தான் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை விற்பனைக்கு வெளியிட்டார். ஆனால் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டார்கள்.

தற்போது உத்தம வில்லன் படம் ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஹீரோ டாக்கிஸ் டாட் காம் இதனை வெப்சைட்டில் ரிலீஸ் செய்திருக்கிறது. இதுபற்றி கூறும்போது, ‘வெளிநாட்டில் உள்ளவர்களும் சட்டப்பூர்வமாக இப்படத்தை பார்க்கும் வகையில் படம் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. எச்டி, 5.1 சர்ரவுண்ட் ஒலியுடன் ஹோம் தியேட்டரில் படத்தைப் பார்க்கலாம். இதேபோல் ரஜினியின் லிங்கா, அஜீத்தின் என்னை அறிந்தால், அனேகன், காக்கி சட்டை படங்களும் வெளியிடப்பட்டிருக்கிறது’ என்றனர். 

0 comments:

Post a Comment