
தனுஷை ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் அடுத்த கமல் என்று கூறி வருகின்றனர். இந்த கருத்து பல கமல் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்த தனுஷே அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள், அவர் எங்கேயோ இருக்கிறார் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் நடித்த மாரி திரைப்படம் ஜுலை 17ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது. இதே தேதியில் தான் கமல் நடித்த பாபநாசம் படமும் வெளிவரும் என அறிவித்துள்ளனர்.
இரண்டு படங்களும் ஒரே நாளில் வந்தால் வசூல் கண்டிப்பாக பிரியும் என தற்போதே கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment