Sunday, June 28, 2015


வா, ஜெயம் கொண்டான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் லேகா வாஷிங்டன். நல்ல திறமை, அழகு இருந்தும் இவரால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியவில்லை.
இதுக்குறித்து சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழ் ஒன்றி இவர் கூறுகையில் ‘அஜித், விஜய், சூர்யா, ஆர்யா, சிம்பு கூடல்லாம் நடிக்கணும்னு எனக்கு ஆசை இல்லை. சும்மா ஒரு பந்தாவுக்காக சொல்லவில்லை. நிஜத்தில் அதுதான் என் குணம். ஆனால், அந்த குணம் தான் சினிமாவுக்கு செட் ஆகவில்லை. வேற வேலை பார்த்துட்டு இருந்தேன்.

மேலும், தற்போது எனக்கு பிடித்த வேலையை நான் பார்க்கிறேன், அது போதும் எனக்கு’ என்று கூறியுள்ளார். இது அஜித், விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டுபண்ணிவிட்டது.

0 comments:

Post a Comment