த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துவரும் படம் தூங்காவனம். இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது ஹைதராபாத் பகுதிகளில் நடந்துவருகிறது. கமல்ஹாசனின் உதவியாளரான ராஜேஷ் இப்படத்தினை இயக்கிவருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தினைத் முடித்த கையுடன் இந்தியில் படம் இயக்கவிருக்கிறாராம் கமல்.

‘அமர் ஹெய்ன்’என்று பெயரிடப்பட்டுள்ள இந்திப்படம் தமிழில் ஏற்கெனவே படமாகவிருந்த “தலைவன் இருக்கிறான்” படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சைஃப் அலிகானை மனதில் வைத்தே படத்தை எழுதிவருவதாகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கமல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்திலும் கமல்நடிக்கவிருக்கிறார். அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய், லண்டன், டெல்லி என்று படப்பிடிப்பு நடைபெறும் இடங்களையும் முடிவுசெய்து விட்டார்களாம். தூங்காவனம் முடிந்தகையோடு திட்டமிட்டபடி இந்திப்படத்திற்கான வேலையை தொடங்குவார்கள்.
துபாய், லண்டன், டெல்லி என்று படப்பிடிப்பு நடைபெறும் இடங்களையும் முடிவுசெய்து விட்டார்களாம். தூங்காவனம் முடிந்தகையோடு திட்டமிட்டபடி இந்திப்படத்திற்கான வேலையை தொடங்குவார்கள்.
0 comments:
Post a Comment