Sunday, June 7, 2015


தினம் தினம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சமூக வலைதளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்கின்றனர். வேறு எந்த நடிகர்களின் ரசிகர்களும் இந்த அளவுக்கு மோதிக் கொள்வதில்லை.

ட்விட்டர் போன்ற வலைதளங்களின் வரவால் இவர்களின் சண்டையை இந்திய அளவில் டிரெண்டாக்கி விடுகின்றனர்.

கடந்த வாரத்தில் மாசு என்ற மாசிலாமணி படத்தில் நடிகர் சூர்யா, அஜித் மற்றும் விஜய் படங்களின் வசனங்களைப் படத்தில் பேசியதைக் கண்டித்து, சமூக வலைதளங்களில் மோதிக் கொண்ட அஜித், விஜய் ரசிகர்கள் நேற்று மீண்டும் ட்விட்டர் மூலமாக மோதிக் கொண்டுள்ளனர்.

நேற்று நடந்த மோதலுக்கும் காரணம் சூர்யாவின் மாசு படம் தானாம். சூர்யாவின் மாசு படத்தைக் கிண்டலடித்து மோதிக் கொண்ட அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்கள், தங்கள் மோதலுக்கு வைத்த தலைப்புக்கள் இவை தான்.

#WhyVijayAndHisFansAreShameless என்று அஜித் ரசிகர்களும் #WhyAjithAndHisFansAreMentals என்று விஜய் ரசிகர்களும் மோதலுக்கு தங்கள் தலைப்பிட்டு டிவிட்டரை ட்ரெண்டாக்கியுள்ளனர்

0 comments:

Post a Comment