உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'உத்தம வில்லன்' திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதுடன் ஊடகங்களின் நல்ல விமர்சனத்தையும் பெற்று, கமல்ஹாசனின் வெற்றிப்பட வரிசையில் இணைந்தது. இந்நிலையில் உத்தம வில்லன்' திரைப்படம் அதிகாரபூர்வமாக ஆன்லைனில் நேற்று முதல் ரிலீஸாகியுள்ளது. பிரபல சினிமா இணையதளம் ஒன்றில் ரிலீஸாகியுள்ள இந்த படத்தினை இந்தியாவில் இருப்பவர்கள் தவிர மற்ற நாடுகளில் வாழும் அனைவரும் பார்க்கலாம்.
HD 1080p தொழில்நுட்பத்தில் ஆன்லைனில் ரிலீஸாகியுள்ள இந்த படத்தை நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்தி பிற நாடுகளில் உள்ள கமல் ரசிகர்கள் இனி தங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் உட்கார்ந்தே 'உத்தம வில்லனை' பார்க்கலாம். வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு கொடுக்கும் கமல்ஹாசன், தனது அடுத்தடுத்த படங்களையும் இதேபோன்று ஆன்லைனில் ரிலீஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இணையதளம் ஏற்கனவே ரஜினியின் லிங்கா, அஜீத்தின் 'என்னை அறிந்தால்', தனுஷின் 'அனேகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'காக்கி சட்டை' போன்ற படங்களை ஆன்லைனில் ரிலீஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன், ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜாகுமார், ஜெயராம், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்த

0 comments:
Post a Comment