Monday, June 8, 2015



தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்த எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால் அவருக்கு வாய்ப்புகள் வரிசையாக வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் நடிகை மேனகா (ரஜினியுடன் நெற்றிக்கண்ணில் நடித்தவர்) - நடிகர் சுரேஷின் மகள்தான் இந்த கீர்த்தி. குழந்தையிலிருந்தே நடித்து வரும் கீர்த்தி, குமரியானதும் தமிழில் ஒப்பந்தமான முதல் படம் இது என்ன மாயம். அடுத்து ரஜினிமுருகன், பாம்பு சட்டை. 

இந்தப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, மேலும் பல படங்களில், குறிப்பாக பெரிய நிறுவனப் படங்களில் நடிக்க அழைப்பு வருகிறதாம். தமிழில் மிக சரளமாக பேசக் கூடிய திறமை இருப்பதால், கீர்த்தியே இயக்குநர்களில் முதல் தேர்வாக உள்ளாராம். பிரபு சாலமன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இப்போது கையெழுத்திட்டுள்ளாராம் கீர்த்தி.

0 comments:

Post a Comment