கடந்த வெள்ளிக்கிழமை (ஜுன் 5ம் தேதி) வெளியான காக்கா முட்டை படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று அதிக விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளது.
தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரமேஷ், விக்னேஷ் என இரண்டு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த இரண்டு சிறுவர்களும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகர்களாம். அவர்களுக்கு தோனியை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாகவே இருந்து வந்ததுள்ளது.
இவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கேப்டன் தோனியை சந்திக்க ஏற்பாடு செய்தது இப்படத்தை வாங்கி வெளியிட்ட பாக்ஸ் ஸ்டார் நிறுவனம். இதற்காக மும்பையில் இருக்கும் தோனியை சந்திக்க நேற்று (7-6-15) இயக்குனர் மணிகண்டன், ரமேஷ், விக்னேஷ் மூவரும் மும்பைக்கு பறந்துள்ளனர்.
அங்கு தோனிக்கு அவர் ‘காக்கா முட்டை’ படத்தின் டிரைலர் மற்றும் சில காட்சிகளை போட்டு காண்பித்துள்ளனர். இரண்டு சிறுவர்களின் நடிப்பை பார்த்த தோனி இருவரையும் மனதார பாராட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment