Saturday, June 6, 2015

நஸ்ரியாவை தொடர்ந்து பிரச்சனையில் சிக்கிய பகத் பாசில் - Cineulagam
சமீபத்தில் நஸ்ரியா திருவனந்தபுரத்தில் ஒரு கார் மீது தன்னுடைய காரை மோதி பிரச்சனையில் சிக்கினார். தற்போது பகத் பாசில் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
அதாவது தற்போது பகத் ஐயோபின்டன் புஸ்தகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் பகத் யானையின் தந்தத்தை பிடித்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோவாக யாரோ வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இதனை பார்த்த கேரள மாநில விலங்குகள் நலச் சங்க உறுப்பினர் எம்.என். ஜெயசந்திரன் என்பவர் பகத் பாசில் மீது தற்போது விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.

0 comments:

Post a Comment