பிரபல நடிகை ஆர்த்தி அகர்வால் நியுஜெர்சியில் மரணம்
சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான மேரிகோம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கிய இயக்குனர் ஓமங் குமார், அடுத்ததாக மற்றொரு உண்மைக்கதையை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் கைது செய்யப்பட்ட இந்தியரான சர்பீத்சிங் என்பவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் ஓமங் குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சர்பீத்சிங், 23 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்தவர். அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முன்னரே சிறையில் சக கைதிகளால் அவர் அடித்து கொல்லப்பட்டார். 23 வருட சிறை வாழ்க்கையில் சர்பீத்சிங்கை மூன்று முறை அவருடைய சகோதரி தல்பீர் கெளர் என்பவர் நேரில் சந்தித்துள்ளார்.
இயக்குனர் ஓமங் குமார், சர்பீத்சிங் அவர்களின் சகோதரி தல்பீர் கெளர் அவர்களுடன் ஆலோசனை செய்து பல உண்மைச் சம்பவங்களை கேட்டறிந்து அதன்பின்னர் அவருடைய அனுமதியுடன் இந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தல்பீர் கெளர் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்பீத்சிங் வேடத்திலும் மற்ற கேரக்டர்களிலும் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment