தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் பாகுபாலி, ருத்ரம்மாதேவி ஆகிய இரண்டு சரித்திரப்படங்களில் ஒரே அனுஷ்கா நடித்து வந்தார் என்பது தெரிந்ததே. இந்த இரண்டு படங்களுமே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்களில் உருவாகியிருக்கும் இந்த இரண்டு படங்களையும் தமிழில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழில் நடிகை அனுஷ்கா ஏற்கனவே 'இரண்டு' போன்ற ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் அவர் பெயர் சொல்லும்படி புகழ்பெற்றது 'அருந்ததி' படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்தான் தமிழில் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகுபாலி, ருத்ரம்மாதேவி ஆகிய இரண்டு படங்களையும் அடுத்தடுத்த மாதங்களில் அதாவது ஜூன் 26 மற்றும் ஜூலை 10 ஆகிய தேதிகளில் ரிலீஸ் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்யவுள்ளதால் தமிழகத்தில் உள்ள அனுஷ்காவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இரட்டை விருந்து காத்திருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபாலி' திரைப்படத்தில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, தமன்னா, சுதீப், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவானி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அதேபோல் ருத்ரம்மாதேவி' படத்தில் அனுஷ்கா, ராணா,அல்லு அர்ஜூன்,பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை குணசேகர் தயாரித்து இயக்கியுள்ளார்.

0 comments:
Post a Comment