Saturday, June 6, 2015

 காஞ்சனா 2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அந்தப்படத்தின் நாயகன் ராகவாலாரன்ஸ், வேந்தர்மூவிஸூக்கு ஒருபடம் செய்யவிருக்கிறார். காஞ்சனா 2 வெற்றி என்றதும் அவரைத்தேடி நிறைய வாய்ப்புகள் வந்தனவாம். காஞ்சனா2 பெரியவசூலைக் கொடுத்த படம் என்பதால், திரையுலக வழக்கப்படி அவர் தன்னுடைய சம்பளத்தைப் பலமடங்கு உயர்த்திவிட்டாராம்.
இதனால் அவரைத் தேடிவந்தவர்கள் எல்லாம் பின்வாங்கிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. வெற்றி என்றால் சம்பளம் உயர்வது வாடிக்கைதானே என்றால், பேய்ப்படங்களைப் பொறுத்தவரை எல்லாப்படங்களுமே ஓடிவிடுவதில்லை, லாரன்ஸே முதலில் எடுத்த முனி பெரியவெற்றியைப் பெறவில்லை, அந்தமாதிரிப் படங்களுக்கு மினிமம்கியாரண்டி உண்டு என்பதால் தேடிப்போகிறார்கள்.
அந்த மினிமம்கியாரண்டி என்பது படத்தின் பட்ஜெட் கட்டுக்குள் இருக்கும்வரைதான் சரியாக இருக்கும். பட்ஜெட் அதிகமாகிவிட்டால், படம் பெரிய வெற்றி என்றால்தான் பணத்தைத் திரும்பப்பெறமுடியும். லாரன்ஸ் சம்பயத்தை உயர்த்திவிட்டால் பட்ஜெட் அதிகரித்துவிடும் அதனாலேயே பலரும் பின்வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்காக கேட்ட சம்பளத்தைக் குறைத்துச் சொல்லமுடியாதே? அதனால் காத்திருந்திருக்கிறார்.
வேந்தர்மூவிஸிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள். இந்தப்படத்துக்காக அவர் என்ன சம்பயம் வாங்கியிருக்கிறார் என்பதைச் சொல்லாவிட்டாலும் எல்லோரும் வியக்கிற மாதிரியான சம்பளம் என்று சொல்கிறார்கள். அந்தச்சம்பளம், சுமார் பனிரெண்டுகோடி என்று சொல்லப்படுகிறது. இது உண்மையாங்க? 
 

0 comments:

Post a Comment