Saturday, June 6, 2015

இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையுமே யூடியூப்பிலும் கண்டுகளிக்கலாம். அதோடு அந்த நிகழ்ச்சிகளை டவுன்லோடும் செய்து கொள்ளலாம். ஆனால், இப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளை யூடியூப்பில் பார்க்க முடியாது.
காரணம், ஹாட்ஸ்டார்.காம் என்றொரு இணைதளத்தை தொடங்கியுள்ள விஜய் டிவி அதன் மூலம் மட்டுமே விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க வழி செய்திருக்கிறது. ஆனால் நீண்டகாலமாக யூடியூப்பில் அந்த சேனல் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து வந்த உலக தமிழ் ரசிகர்களுக்கு இந்த தகவல் தெரியாததால் இப்போது விஜய் டிவியின் பார்வையாளர்கள் கவுண்டிங் குறைந்து விட்டதாம்.
அதோடு, விசயம் தெரிந்து ஹாட்ஸ்டார்.காமில் வந்து நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களால் அந்த நிகழ்ச்சிகளை டவுன்லோடு செய்யவும் முடியாதாம். இதனால் திரும்பத்திரும்ப வரும் நேயர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறதாம். மேலும், யூடியூப்பில் இருந்து விஜய் சேனல் விலகியதற்கு காரணம் பற்றி விசாரித்தால், இந்த ஹாட்ஸ்டார்.காமில் நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பதால் விஜய் டிவிக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கிறதாம்.
அதன்காரணமாகவே வியூவர்ஸ் கம்மியானாலும் பணம் கிடைக்கிறதே என்று இதே ரூட்டில் பயணித்து வருகிறதாம் விஜய் டிவி. அதோடு, தங்களுக்கான நேயர்களை இந்த இணையதளத்திற்கு விரைவில் இழுத்து வந்து விடலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்களாம்.

0 comments:

Post a Comment