சிறுத்தை, வீரம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித். முதல்கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்டப்படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடிக்கும் படம் பற்றியும் இப்போதே முடிவுசெய்துவிட்டார் என்றும் இயக்குநர் விணுவர்தன்தான் அஜித்தின் அடுத்தபடத்தை இயக்கப்போகிறவர் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
அஜித் தரப்பிலிருந்து இதுபற்றி இதுவரை எந்தத்தகவலும் இல்லை என்றாலும் அதற்கடுத்த கட்டமாக அந்தப்படத்தைத் தயாரிக்கப்போவது யார்? என்பது பற்றிய விஷயங்களும் வந்துகொண்டிருக்கின்றன, அஜித்தை வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன் உட்பட பல படங்களைத் தயாரித்த அவருடைய நண்பர் நிக்ஆர்ட்ஸ் சக்ரவர்த்திதான் அஜித்தின் அடுத்தபடத்தைத் தயாரிக்கப்போகிறார் என்கிற செய்திகள் உலாவந்தன.
இது தொடர்பாக, நிக்ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தரப்பில் கேட்டபோது, இதுவரை எங்களிடம் அவர் அதுபற்றி எதுவும் சொல்லவில்லை, அவர் மனதில் அப்படி ஒரு எண்ணம் எற்பட்டிருக்கலாம் அதை வேறுயாரிடமாவது சொல்லியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தம்முடைய நண்பர் பல கஷ்டங்களில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பதால் அவருக்கு ஒருபடம் நடிக்கலாம் என்று அஜீத் நினைப்பதாகவும் சொல்லப்பட்டது.
அஜித், தரப்பில் இதுபற்றிக் கேட்டபோது, அப்படி ஒரு பேச்சே இதுவரையில் வரவில்லை, அஜித்துடைய அடுத்தபடம் குறித்து பேசுவதற்கான காலம் இதுவல்ல, அதேபோல நிக்ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு அவர் படம் நடிக்கப்போகிறார் என்பதிலும் உண்மையில்லை என்று உறுதியாகச் சொல்லுகிறார்கள். இது இன்றைய நிலவரம் நாளைக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று திரையுலகில் சிலர் ஆருடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment