Saturday, June 6, 2015

வெற்றிமாறன் பெயரில் மோசடி - Cineulagam
பொல்லாதவன், ஆடுகளம் என தொடர்ந்து தரமான படங்களை கொடுப்பவர் வெற்றிமாறன். இவரின் அடுத்த படமான வடசென்னை விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பல புதுமுகங்கள் தேவை என சில சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளவர்களை தொடர்பு கொண்டு, தாங்கள் வெற்றிமாறனின் உதவியாளர், உங்களை நாங்கள் நடிக்க வைக்கின்றோம் என பணம் பறித்துள்ளனர்.
இந்த செய்தி எப்படியோ வெற்றிமாறன் காதுக்கு போக, இது குறித்து காவல்த்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும், தன் பெயரை கூறி யார், பணம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment