ஜீவாவுடன் இணையும் 'இரும்புக்குதிரை' இயக்குனர்?
அதர்வா, ப்ரியா ஆனந்த், ராய்லட்சுமி மற்றும் பலர் நடித்த 'இரும்புக்குதிரை' என்ற படத்தை இயக்கியவர் யுவராஜ் போஸ். மோட்டார் பைக் ரேஸை மையமாக கொண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் யுவராஜ் மீண்டும் ஒரு திரைக்கதையை தயார் செய்து பல நடிகர்களிடம் கதை சொல்லிக்கொண்டிருந்ததாகவும், தற்போது இவரது இயக்கத்தில் நடிக்க ஜீவா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஜீவா தற்போது கவலை வேண்டாம், திருநாள் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் அவர் யுவராஜ் போஸ் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் 'யான்' படத்தோல்வியை அடுத்து கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் ஜீவா உள்ளார். யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் உருவாகி வரும் 'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவா மிகுந்த நம்பிக்கையுடன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜீவாவுடன் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஒன்பது வருடங்களுக்கு பின்னர் நயன்தாராவுடன் ஜீவா நடித்து வரும் திரைப்படம் 'திருநாள்'. இந்த படமும் ஜீவாவுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment