Saturday, June 6, 2015


தென்னிந்திய நடிகைகளில் முன்னணி இடத்தை பிடித்துவிட்ட நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் மும்பையில் வீடு வாங்கியதோடு, புதிய ரேஞ்ச்  ரோவர் கார் ஒன்றையும் வாங்கிய செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதேபோல் மற்றொரு கோலிவுட் நடிகர் ஒருவர் புதிதாக சொந்த வீடு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மிகக்குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன் புதிய வீடு ஒன்றை வாங்கி அதன் கிரகப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் சதீஷ், தனது சமூக வலைத்தளத்தில் 'எனது அருமை நண்பர் சிவகார்த்திகேயனின் புதிய வீடு வாங்கும் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்' என பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் புதிய வீடு கிரகப்பிரவேச விழாவில் அவருக்கு நெருக்கமான நண்பர்களும் காமெடி நடிகர் சூரி உள்பட பல  திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினிமுருகன் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment