Monday, June 1, 2015


பாகுபாலி படத்தின் நடிகை அனுஷ்காவிற்குத் திருமணம் என்று வெளியான செய்தியால் பரபரப்புக்குக்குள்ளான தெலுங்குலகம் மீண்டும் தற்போது அத்தகைய பரபரப்புக்கு ஆளாகியிருக்கிறது. ஆமாம் அந்த படத்தின் நாயகன் பிரபாசுக்கு இந்த வருடம் டிசம்பரில் கல்யாணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தோட ராசி தொடர்ந்து அடுத்தடுத்து நாயகன், நாயகி இருவருக்கும் திருமணம் நடந்து விடும்போலத் தெரிகின்றது.

35 வயதாகியும் திருமணம் பற்றி எதுவும் வாய்திறக்காமல் இருந்து வந்த டோலிவுட்டின் யங் ரிபல் ஸ்டார் பிரபாஸ் தற்போது பாகுபாலி படத்தை முடித்த கையோடு வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம். பெற்றோர் பார்த்து உள்ள பெண்ணை மணம் முடிக்கப் போகிறார் என்று கூறுகிறார்கள். அந்தப் பெண் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவராம். 


தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பாகுபாலி படத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டு தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். 70% படப் பிடிப்பு இரண்டாம் பாகத்தில் முடிந்து விட்டது என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியிருக்கிறார். டோலிவுட்டின் தி மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் என்ற பட்டப் பெயருக்கு உரியவரான பிரபாசுக்கு திருமணம் என்றவுடன் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள், ஆனால் இந்த செய்தியைக் கேட்டது முதல் அவரது இளம் ரசிகைகள் பலரும் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி விட்டனராம். சரி சரி அழாதிங்க கேர்ள்ஸ்...கண்ணத் தொடைச்சுக்குங்க...!

0 comments:

Post a Comment