Monday, June 1, 2015

Vijay-in-Puli-First-Look1
விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கி வரும் புலி படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதிப், நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினர். கடைசியாக தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்தி அங்குள்ள புலி கோவிலில் படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விஜய்யும் தன்னுடைய டப்பிங் வேலையை தொடங்கியுள்ளார். புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment