தெலுங்கின் முன்னணி நாயகன் மகேஷ் பாபுவிற்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம். மேலும் மகேஷ் பாபுவின் பல தெலுங்கு படங்கள் தமிழில் டப்பாகி இங்கே வெளியானது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அவரது படங்கள் தமிழில் அதிகம் ரீமேக் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேரடியாகவே மகேஷ் பாபு தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். பிவிபி சினிமா தயாரிப்பில் ’சீதம்மா வகிட்டிலோ ஸ்ரீமல்லி செட்டு’ பட இயக்குநர் ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள படம் ‘பிரம்மோற்சவம்’ . இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாக உள்ளது.

இப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரணிதா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இதே பாணியில் தெலுங்கு , தமிழ் என இருமொழிகளிலும் கார்த்தி, நாகார்ஜுன், தமன்னா நடிப்பில் பெயரிடப்படாத படமொன்றை பிவிபி சினிமா நிறுவனம் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment