Monday, June 1, 2015


மொழி படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து ஜோதிகா நடித்து வெளியாகியுள்ள படம் 36 வயதினிலே. இப்போது அவருக்கு நிஜ வயது 36 என்பதால் அதையே அப்படத்தின் டைட்டிலாக்கி விட்டனர்.

அதோடு, மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ரீமேக்கை ஜோதிகாவுக்காக சில மாற்றங்களை செய்து படத்தை தயாரித்தனர்பல வருட இடைவெளிக்குப்பிறகு ஜோதிகா நடிக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும், ஓப்பனிங்கும் அப்படத்துக்கு கிடைத்தது.

குறிப்பாக பெருவாரியான பெண்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தனர். அதனாலேயே 36 வயதினிலே படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில், அப்படத்தின் ஆடியோ விழாவின்போது தான் சூர்யாவிடம் பெரிய சம்பளம் கேட்டிருப்பதாக சொன்னார் ஜோதிகா.

அதேபோல் அதையடுத்து அப்படம் சம்பந்தமாக மீடியாக்களை சந்தித்தபோது ஜோதிகாவுக்கு முன்னணி நடிகைகளுக்குரிய பெரிய சம்பளத்தை தான் கொடுத்திருப்பதாக சூசகமாக சொன்னார் சூர்யா.

ஆனால் அப்படி அவர் எவ்வளவு சம்பளம்தான் கொடுத்திருக்கிறார் என்று அப்பட வட்டாரத்தை விசாரித்தால், ஜோதிகாவுக்கு 5 கோடி சம்பளத்தை சூர்யா கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் தற்போதைய கோலிவுட் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகியிருக்கிறார் ஜோதிகா.

0 comments:

Post a Comment