தற்போது இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘புலி’ படத்தில் விஜய்யுடன் பிரபு, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் படத்தின் பாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ‘துப்பாக்கி’ படத்தில் ‘கூகுள் கூகுள்’ பாடலையும், அதனைத் தொடர்ந்து ‘கத்தி’ படத்தில் ‘செல்ஃபி புள்ள’ பாடலையும் விஜய் பாடி சூப்பர் ஹிட்டாக்கியதைப் போலவே புலி படத்திலும் ஒரு பாடலை அவர் பாட வேண்டுமென ரசிகர்களும் சரி, புலி யூனிட்டும் சரி விருப்பப் பட்டனர்.
எல்லோருடைய எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்ய புலி படத்திலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் விஜய். பாடல் அற்புதமாக வந்திருப்பதில் புலி யூனிட் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் அந்தப் பாடல் விஜய் ரசிகர்களின் செவி குளிர காற்றில் வரவிருக்கிறது..!
பாடல் பதிவின்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே. அடுத்தடுத்து ‘க்ளிக்’ செய்து பார்க்கவும்…




0 comments:
Post a Comment