Monday, June 1, 2015

மோகன்லாலுடன் நடிக்க மம்முட்டி மறுக்கவே இல்லை - Cineulagam
சாஜி கைலாஸ் இயக்க இருக்கும் புதிய படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க மம்முட்டி தயங்கியதாக சமீபத்தில் செய்திகள் வந்திருந்தது.
தற்போது அந்த தகவலை நடிகர் ரென்ஜி பனிகர் முற்றுலும் மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நானும், ரஞ்சித்தும் இணைந்து ஒரு கதை எழுதி இருந்தோம். மம்முட்டி, மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை சாஜித் இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் முடிவு செய்தோம்.
கதையை கேட்ட மோகன்லால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள நிலையில், மம்முட்டி கால்ஷீட் பிரச்சனை காரணமாக தயங்கினார்.
மற்றபடி மோகன்லாலுடன் இணைந்து நடிக்க மம்முட்டி தயங்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment