தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சார்மி. ஆனால் அவரது மார்க்கெட் தற்போது சரசரவென சரிந்து கிடக்கிறது. இந்நிலையில் சார்மியை வைத்து டெம்பர் பட வெற்றி இயக்குனர் பூரி ஜகன்நாத் ஜோதிலட்சுமி என்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜுன் 4ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் சார்மி 10 நிமிடங்கள் நடனமாட இருக்கிறார்களாம்.
தங்கள் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வர யோசிக்கும் நாயகிகளின் மத்தியில் சார்மி இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ஒரு காரணத்திற்காக என்று கூறப்படுகிறது.
சார்மியின் மார்க்கெட் சரிந்து இருப்பதால் தான் இதுபோன்ற நிகழ்ச்சியில் சார்மி அதிகம் ஈடுபாடு காட்டுவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment