ஜூன் கடைசியில்தான் இந்தப்படமே தொடங்குகிறது. அதற்குள் ஜூலையில் ஒருபடத்தில் நடிக்கத் தேதிகள் கொடுத்திருக்கிறாராம். இசையமைப்பாளர் ஜிப்ரானின் சகோதரர் அமித் இயக்கும் புதியபடத்தில் நடிப்பதற்குத்தான் ஜூலையில் தேதி கொடுத்திருக்கிறாராம். ஜூன் கடைசியில் ஒரு படத்தைத் தொடங்கிவிட்டு ஜூலையிலேயே அடுத்தபடத்தைத் தொடங்குவது ஏன்?
ஏனென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்ட கரிகாலன் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒருபடம் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தாராம் விக்ரம். அந்தத் தயாரிப்பாளருக்குத்தான் அரிமாசங்கர் இயக்கும் படத்தைச் செய்வதாக இருந்தது. கடைசிநேரத்தில் அது ஐங்கரன்நிறுவனத்துக்குப் போய்விட்டது. அதனால் கரிகாலன் தயாரிப்பாளர் கடும்கோபம் கொண்டுவிட்டாராம்.
எங்களுக்குப் படம் செய்து தருவதாகச் சொல்லிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாக அரிமாசங்கர் இயக்கும் படத்தையும் வேறு நிறுவனத்துக்கு மாற்றிவிட்டுவிட்டீர்கள் எனவே எங்களுக்கு உடனடியாகப் படம் செய்யவேண்டும் என்று கறாராகச் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. எனவே அரிமாசங்கர் படத்துக்கு அடுத்து நடிக்கலாம் என்று நினைத்த விக்ரம், தன் முடிவை மாற்றிக்கொண்டு, அமித் இயக்கும் படத்தையும் ஜூலையிலேயே தொடங்குங்கள் இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்கிறேன் என்று சொல்லித் தேதிகள் கொடுத்திருக்கிறார் விக்ரம் என்று சொல்லப்படுகிறது.

0 comments:
Post a Comment