வேலையில்லாப்பட்டதாரி பாகம்இரண்டில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தாவே வடசென்னை படத்திலும் ஜோடியாக நடிக்கப்போகிறார் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஒரேநாயகியுடன் அடுத்தடுத்த படங்களில் தனுஷ் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பதால் இதுதொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளும் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
இதில் சர்ச்சைக்கு எங்கே இடமிருக்கிறது? என்கிற கேள்வி வரும். இருக்கிறது. ரஜினிமுருகனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதியபடத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பேச்சு திரையுலகில் இருந்தது. இந்தவிசயத்தைத் தெரிந்துகொண்ட தனுஷ், சிவகார்த்திகேயனோடு சமந்தா நடித்துவிடக்கூடாது என்பதற்காகவே அடுத்தடுத்த படமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் சமந்தாவையே ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
திரையுலகம் என்னதான் நடிகர்களின் உலகமாக இருந்தாலும் அவர்களுடைய மதிப்புக்கேற்பவே வியாபாரங்கள் இருந்தாலும் ஒரு நாயகன் எந்த நாயகியுடன் ஜோடியாக நடிக்கிறார் என்பதைப் பொறுத்தும் மக்கள் மத்தியில் அவர்களுக்கான மதிப்பு உயரும் என்று சொல்லுவார்கள். இதனால்தான் இப்போதைய முன்னணிநாயகியாக இருக்கும் சமந்தாவுடன் ஜோடி சேர சிவகார்த்திகேயன் முயன்றார் என்றும் அதைத் தடுக்கவே தன் படத்தில் தனுஷ் இணைத்துக்கொண்டார் என்றும் பேசப்படுகிறது. இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக வெளியில் சொல்லிக்கொண்டாலும் அவர்களுக்குள்ளான மோதல் தொடர்ந்துகொண்டிருப்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என்கிறார்கள்.

0 comments:
Post a Comment