Monday, June 1, 2015

mahesh-babu-jan-16
பிவிபி சினிமா பட நிறுவனம் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது கார்த்தி-நாகர்ஜூனா நடிக்கும் புதிய படம், ஆர்யா நடிக்கும் இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், பிரம்மோற்சவம் என்ற புதிய படத்தையும் பிரம்மாண்ட முறையில் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். மகேஷ்பாபு முதன்முறையாக நேரடியாக நடிக்கும் தமிழ் படம் இது.
இப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங், ப்ரணிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறர்ர். இப்படத்தை ஸ்ரீகாந்த் அதலா என்பவர் இயக்குகிறார். மிக்கி மேயர் இசையமைக்கிறார். பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
குடும்ப உறவுகளின் மகிமையையும், உன்னதங்களையும் சொல்வதோடு, குடும்ப உறவுகளை எப்படி கொண்டாட வேண்டும், தலைமுறைகளை தாண்டி நம் பாரம்பரியத்தை எப்படி போற்றிக் காப்பது என்பதை மியூசிக்கல் எண்டர்டெயினராக சொல்ல வரும் படம்தான் பிரம்மோற்சவம்.

0 comments:

Post a Comment