சிறப்பான திறமைகள் ஏதும் இல்லை என்றாலும், உலக அளவில் பெருந்திரளான ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர் அமெரிக்க தொலைகாட்சி நடிகை கிம் கர்தாஷியன்.
இவரும் இவரது தங்கையரும், நிர்வான போஸ் கொடுத்தே உலகப் புகழ் பெற்றவர்கள். 34 வயதான இவருக்கும் பாடகர் கென்யே வெஸ்டுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது குழந்தை உள்ளது.
குழந்தை பிறப்புக்கு முன் நிர்வாண போஸ் கொடுத்து கிரங்கடித்த கிம், குழந்தை பிறந்த பின் கொஞ்சம் மாறுவார் என்று பார்த்தால், குழந்தை பிறந்த பின்னும், பேபர் என்ற ஆங்கில இதழுக்கு முன்னும் பின்னும் மாற்றி மாற்றி நிர்வாணப் போஸ் கொடுத்தார்.
கிம்மின் இந்த போஸ் சமூகவலை தளங்களில் வைரலானது மட்டுமல்லாது, உலகின் பெரும்பாலான ஊடகங்களில் கிம்மின் பெயர் வெளியானது. உலகமே இந்த போஸ் குறித்து விமர்சித்த வேளையில், கிம்மின் கணவர் கென்யே வெஸ்ட் பாராட்டு தெரிவித்தது தான் ஹைலைட்.
அதைத் தொடர்ந்து வோக் பத்திரிக்கைக்கு மீண்டும் ஒரு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார் கிம். அதுவும் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை மார்லின் மன்ரோ ஸ்டைலிலாம். மல்ரின் மான்ரோ போல் தோற்றம் அளிப்பதற்காக, சில வாரங்களுக்கு முன்னரே தலைக்கு லேசான மஞ்சள் நிறத்தில் டை அடித்து விட்டாராம் கிம்.
இது மட்டுமல்ல, கிம் கர்தாஷியன் இந்த நிர்வாண போஸ் கொடுக்கும் போது அந்த போட்டோ ஷூட்டை ஒரு வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் பேக்கிரவுண்டில், அவரது கணவர் கென்யே வெஸ்ட் பாடிய பாடல் ஒன்றை சேர்த்துள்ளாராம் கிம் கர்தஷியன்.

0 comments:
Post a Comment