தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.
தற்போது விஜய் இப்படத்தின் டப்பிங் வேலையில் பிஸியாக உள்ளார். இப்படத்தில் ஒரு காட்சிக்காக விஜய் டூப் போடாமலேயே 60 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் ரசிகர்களுக்கு இப்படம் குறித்து எதிபார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில், இன்னும் சில தினங்களில் விஜய்யின் பிறந்த நாள் வரவிருக்கின்றது. அந்நாளில் புலி படத்தின் டீசரும் வெளியாக உள்ளது.
இப்போதே அவருடைய ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தற்போது #VIJAY BDAY என்ற டாக் கிரியேட் செய்து பரபரப்பாக ட்ரண்ட் செய்துவருகின்றனர்.

0 comments:
Post a Comment