அதென்னவோ தெரியவில்லை. பேமஸ் ஹீரோக்களின் மகள்களோடு நடிப்பதென்றால் விஷாலுக்கு அல்வா கட்டி போலிருக்கிறது. வரலட்சுமியுடன் நடித்தார்.
அதற்கப்புறம் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுடன் நடித்தார். கமலின் மகள் ஸ்ருதிஹாசனுடன் நடித்தார். இப்போது அவரது இரண்டாவது மகள் அக்ஷராவுடன் நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். பேச்சு வார்த்தைகள் ஜரூராக போய் கொண்டிருக்கின்றன. என் கனவு நடிப்பல்ல, இயக்கம்தான் என்று வடக்கில் சுற்றிக் கொண்டிருக்கிறார் அக்ஷரா. திராட்சை கண்கள், தீக்குச்சி லுக், பிரெஞ்ச் ஒயின் சிரிப்பு என்று இன்டஸ்ட்ரியை கலக்கும் அவரிடம், நடிங்க நடிங்க என்று ஒரு நூறு இயக்குனர்கள் சுற்றி வந்தாலும், பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியிலிருக்கிறார் அவர். இந்த நேரத்தில் விஷாலின் அழைப்பு அவரது செவியில் ஏறுமா? ஊர் உலகமே வெயிட்டிங்…. இந்த செய்திக்கு சம்பந்தமில்லாத இன்னொரு செய்தி. சரத்குமாரோடு வரிந்து கட்ட ஆரம்பித்துவிட்டார் விஷால். ஒவ்வொரு நிருபருக்கும் போன் அடித்து, பிரியாதான் இருக்கேன். வந்து நடிகர் சங்க மேட்டரை கேட்டு எழுதுங்க என்கிறாராம். பின்னாடி என்ன விஷயம்னு புரியலையே?

0 comments:
Post a Comment