Monday, June 1, 2015

வெள்ளை மாளிகையில் ஏ.ஆர்.ரகுமான் ஆவணப்படம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், ஏ.ஆர்.ரகுமான் பற்றிய டாகுமென்டரி திரையிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார். மற்றும் கிராமி உட்பட பல்வேறு விருதுகள்  பெற்றுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, ‘ஜெய் ஹோ’ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இசைத்துறையில் அவர் கடந்து வந்த பாதை இதில் இடம்பெற்றுள்ளது. 60 நிமிடம் கொண்ட இந்த ஆவணப்படத்தை உமேஷ் அகர்வால் இயக்கியுள்ளார். இப்படம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது. இந்த தகவலை இசைய மைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், வாஷிங்டன், வியன்னாவில் இசை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளார்.

0 comments:

Post a Comment