Monday, June 1, 2015


சுந்தர் சி இயக்கும் பெரும்பாலான படங்களில் ஹீரோவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ, அதே அளவுக்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். எனவே சுந்தர் சியின் படங்களில் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும்
 
ஆரம்பத்தில் கவுண்டமணி, பின்னர் வடிவேலு என காமெடி நடிகர்களை மாற்றி வந்த சுந்தர் சி, தனது சமீபத்திய படங்கள் அனைத்துக்கும் சந்தானத்தையே காமெடி வேடத்திற்கு புக் செய்தார். இருவரும் இணைந்து சமீபத்தில் கொடுத்த தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை, ஆம்பள, ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. இந்நிலையில் சுந்தர் சி அடுத்து இயக்கவுள்ள அரண்மனை 2 படத்திற்கும் காமெடி கேரக்டருக்கு சந்தானத்தையே புக் செய்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் அதிரடியாக சூரியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அரண்மனை 2 படத்தின் காமெடி கேரக்டருக்கு சூரிதான் பொருத்தமாக இருப்பார் என சுந்தர் சி தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சந்தானம் தற்போது ஹீரோவாக மாறியுள்ளதால்தான் சூரியை சுந்தர் சி ஒப்பந்தம் செய்துள்ளதாக இன்னொரு செய்தி கூறுகின்றது. எது எப்படியோ, சூரிக்கு ஒரு ஜாக்பாட் அடித்துவிட்டது என்பது மட்டும் உண்மை.

0 comments:

Post a Comment