
சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான 'அரண்மனை' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் என்ற பெயரை பெற்றது. வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய்லட்சுமி, சந்தானம் ஆகியோர் நடித்த இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி, இதன் இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
'அரண்மனை 2' படத்தில் நடிக்க ஏற்கனவே சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா ஆகியோர் உறுதி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சுந்தர் சி, சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர்களிடம் இந்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் சுந்தர் சி தற்போது மேலும் ஒரு நடிகையை அரண்மனை 2' படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவர்தான் நடிகை பூனம் பாஜ்வா
சுந்தர் சி இயக்கிய ஆம்பள' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த பூனம் பாஜ்வா, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் த்ரிஷா நடித்து வரும் 'போகி' படத்திலும் பூனம் பாஜ்வா முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் த்ரிஷா நடிக்கவுள்ள இந்த படத்திலும் பூனம் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சியின் அரண்மனையில் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வை அடுத்து இன்னும் எத்தனை நட்சத்திரங்கள் குவிய இருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment