Saturday, June 6, 2015

போட்டியும் பொறாமையும் நிறைந்த சினிமாவில் இன்றைய இளம் நடிகர்கள் மத்தியில் ஆத்மார்த்தமான நட்புணர்வு நிலவுவது உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயம் மட்டுமல்ல, மகிழ்ச்சியான விஷயமும்…
இந்த விஷயத்தில் நடிகர் ஆர்யாதான் எல்லோருக்குமே நண்பேன்டா.
பெண்கள் விஷயத்தில் பிளேபாயாக இருந்தாலும், நட்பு விஷயத்தில் நம்பர் ஒன்.
ஆர்யாவைப் போலவே சக நட்சத்திரங்களிடம் நட்பு பாராட்டுவதில் முக்கியமானவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் ‘மாப்ள சிங்கம்’.
விமல், அஞ்சலி, சூரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
மாப்ள சிங்கம் படத்தில் இசையமைப்பாளர் அனிருத், சிவகார்த்திகேயன், சூரி, விமல் இணைந்து படத்தின் பிரமோஷனுக்காக ‘எதுக்கு மச்சான் காதலு…’ என்ற பாடலைப் பாடி உள்ளனர்.
மாப்ள சிங்கம் படத்தில் விமல், சூரி நடிக்கின்றனர்.
அந்தப்படத்தில் நடிக்காத சிவகார்த்திகேயன் தன் நண்பர் விமலுக்காக அவர் நடித்த படத்தின் புரமோஷனுக்காக பாடியது திரையுலகில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.
விரைவில் ‘மாப்ள சிங்கம்’ படம் வெளியாக உள்ளது
.

0 comments:

Post a Comment