தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கட்டத்தில் பல நடிகர்கள் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார்கள். அதில் கார்த்தி, மோகன், அரவிந்த்சாமி வரிசையில் இடம்பிடித்தவர் தான் மாதவன்.
இவர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைப்பாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடந்து மின்னேலே, ரன், பார்த்தாலே பரவசம் ஆகிய படங்களின் மூலம் அதிக பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்தார்.
இது மட்டுமின்றி கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்று தானு வெட்ஸ் மானு, ரங்தே பசந்தி, 3 இடியட்ஸ் ஆகிய படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும், இந்திய சினிமாவில் சில நடிகர்களே ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளனர். அந்த வகையில் தானு வெட்ஸ் மானு-2ம் பாகத்தின் மூலம் மாதவனும் இந்த கிளப்பில் இணைந்து மீண்டும் தன் அடுத்த ரவுண்டை ஆரம்பித்துள்ளார்.
மாதவனின் வெற்றி பயணம் இதே போல் என்றும் தொடர
எமது வாழ்த்துக்கள்..
0 comments:
Post a Comment