ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் படம் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய ஜோதிகாவை பல இயக்குநர்கள் மீண்டும் சினிமாவில் இழுக்க முயற்சி செய்தனர். ஆனால் எதுக்கும் பிடி கொடுக்காத ஜோதிகா 'ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் சூர்யாவே தனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்தான் இந்த ஹவ் ஓல்ட் ஆர் யூ. மஞ்சு வாரியர் நடித்த அதே வேடத்தில்தான் இப்போது ஜோதிகா நடிக்கிறார்.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இதனை இயக்குகிறார். இதில் ஜோதிகாவின் கணவராக ரகுமானும் தோழியாக அபிராமியும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை 46 நாட்களில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த சோழிங்கநல்லூர் படப்பிடிப்போடு சரி பூசணி உடைத்து விட்டனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜோதிகாவின் ஆல்டைம் பேவரைட்டான சவீதா தான் அவருக்கு டப்பிங் பேசி வருகிறார்.
கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டு தாழ்வு மனப்பான்மையுடன் வருமானமின்றி ஒரு பெண் கஷ்டப்படுகிறாள். அதிலிருந்து சக பெண்களுடன் இணைந்து வீட்டு மொட்டை மாடிகளில் காய்கறி தோட்டங்கள் வளர்த்து பொருளாதாரத்தில் எப்படி உயர்கிறாள். பிறகு அவளை இந்த தேசமே திரும்பிப் பார்க்கும்படி புரட்சிக்கரமான பெண்ணாக எப்படி மாறுகிறார் என்பதே படத்தின் கதை. ஆனால் மொத்த படப்பிடிப்பும் முடிந்தும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. படம் மார்ச் அல்லது ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment