புற்றுநோயை வென்ற கவுதமி தான் நிஜ ஹீரோ : கமலஹாசன்
புற்றுநோயை கண்டு மனம் துவளாமல், அதை எதிர்த்து வெற்றியும் கொண்ட கவுதமி தான் நிஜ ஹீரோ என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். ஆந்தி்ர மாநிலம் ஐதராபாத்தில், சர்வதேச புற்றுநோய் குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை, நடிகர் கமலஹாசன் துவக்கி வைத்தார்.
பின் அவர் பேசியதாவது, புற்றுநோய் வந்தால், அத்தோடு நம் வாழ்க்கை முடிந்துவிட்டது, விரைவில் இறந்து விடுவோம் என்று பலர் நினைக்கிறார்கள். இது வெறும் பயம்தான். புற்றுநோயை உடனடியாக கண்டு பிடித்து சரியான மருந்து சாப்பிட்டால் அந்த நோயை விரட்டி விடலாம். இதற்கு முன் உதாரணம் கவுதமிதான். புற்றுநோய்க்கு அவர் பணிந்து விடவில்லை. அதை எதிர்த்து தைரியமாக போராடினார். இறுதியில் அதனை விரட்டினார்.
சினிமாவில்தான் நான் ஹீரோ. ஆனால் நிஜவாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ. அவருக்கு முன்னால் நான் துணை நடிகர்தான். நம்பிக்கையுடன் செயல்பட்டால் புற்றுநோயை எளிதில் விரட்டி விடலாம். இவ்வாறு கமலஹாசன் கூறினார்.
0 comments:
Post a Comment