
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்த சித்தி பிரச்சனை ஓய்ந்து தற்போது நடிகை அஞ்சலி முழுவீச்சில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஜெயம் ரவியுடன் "அப்பாடக்கர்", விமலுடன் "மாப்ளசிங்கம்" ஆகிய தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் குத்துப்பாட்டு ஒன்றில் நடனம் ஆட படக்குழுவினர் அஞ்சலியை தொடர்பு கொண்டபோது அவர் ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாகவும், இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அல்லுருசீனு என்ற தெலுங்கு படத்தில் குத்தாட்டம் ஆட நடிகை தமன்னாவுக்கே ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்த நிலையில், அஞ்சலிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க படக்குழுவினர் மறுத்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் அஞ்சலிக்கு தற்போது தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் அவரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஒருவேளை படக்குழுவினர் ஒருகோடி ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டால் அவர் தமன்னாவின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment